Subscribe Us

header ads

குழந்தை திருமணத்துக்கு தடை போடலாம் - இறந்த குழந்தைகளின் திருமணத்துக்கு..?: இந்தியாவில் ஒரு அதிசய கிராமம்...

உத்தரகாண்ட் மாநிலம், சஹரன்பூரில் ஒரு கிராமத்தில் பெற்றோர்கள் தங்கள் 'இறந்த' குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இங்குள்ள மிர்பூர் அருகேயுள்ள மோகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமேஷ்வர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது 8 வயது மகள் இறந்து விட்டார்.


இந்நிலையில், இறந்த மகளின் திருமணத்தை சமீபத்தில் ராமேஷ்வர் வெகு விமரிசையாக நடத்தினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விருந்தினர் கலந்து கொண்டனர். இந்து மதச் சடங்குகளையொட்டி நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் வரதட்சணை பரிமாற்றமும் நடந்தது.



பொம்மை மணமகன், பொம்மை மணமகளை வைத்து இந்த திருமணமும், திருமணம் சார்ந்த சடங்குகளும் நடந்தன. இந்த திருமணம் குறித்து, மோகன்பூர் கிராமத்தில் வசிக்கும் சுபண்ணா என்பவர் கூறுகையில், இது நாட்பாஷி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடைபிடித்து வரும் மிகப்பழமையான பாரம்பரியம். ராமேஷ்வர் அந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த 
நிகழ்ச்சியை நடத்துகிறார் என கூறினார்.



இறந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் இறந்தவர்கள் பிரமச்சாரியாக இல்லை என அவர்கள் நம்புகிறார்கள். இது அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிவந்த பழக்கமாகவும்  கூறப்படுகிறது

Post a Comment

0 Comments