'சும்மா ஒரு கிக்... ஒரு த்ரில்’ என்றுதான் ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், 'மாப்ள தம் அடிக்காம இருக்க முடியலைடா...’ என அடிமையாகிற அளவுக்குப் பற்றிப் படர்ந்துவிடும். தெரிந்தே நுரையீரலுக்குத் தினமும் கொள்ளி வைக்கும் கொடிய புகைப்பழக்கத்தில் இருந்து எப்படி விடுபடுவது?
''புகையிலையில் கலந்துள்ள நிகோடினின் அபாயம் மட்டும்தான் வெளியே தெரியும். ஆனால் வெடி உப்பு, கார்பன் மோனாக்சைடு, அமோனியா ஆர்செனிக், மீத்தேன், பிரஸ்லிக் அமிலம், ஃபார்மிக் அமிலம், கிரிஸால், பைரால், ரூபிடின், மெதிலின் பர்பரோல், பைக்கோலின், பார்வோலின், ஒட்டிடைப், சல்புரேடட் ஹைட்ரஜன், சப்பரிடேட், லூனைன், விரிடைன், மைதிலைமின், பார்மால் டிரையுட், பார்பிக் ஆல்டிஹைட், மரிஜூவானா, அக்ரோலின், மார்ங்காஸ், கொரிடீன் போன்ற 4,000 விதமான அமிலங்கள் சிகரெட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. விஷ வாயுக் கூண்டுக்குள் உங்களை நீங்களே தள்ளுவது எவ்வளவு பெரிய துயரம்'' என அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறார் டாக்டர் ஆல்வின் விஜய்.
புண்பட்ட மனதைப் புகைவிட்டுத் தேற்றுகிறோம்’ எனச் சொல்பவரா நீங்கள்? ஒரு நிமிடம்... டாய்லெட்டுகளில் பயன்படுத்தும் அம்மோனியா ஆசிட் என்கிற ஃபினாயில், நெயில் பாலிஷ் ரிமூவர், இறந்த உடல்களைப் பதப்படுத்தும் ஃபார்மலின் போன்ற அமிலங்களின் கலவையும் சிகரெட்டில் இருக்கின்றன. இத்தகைய நச்சுக்களைக்கொண்டுதான் உங்களின் மனதைத் தேற்றப்போகிறீர்களா?
''சுவாசக் குழாயில் சளி ஏற்பட்டு 'லொக், லொக்’ என்று அடிக்கடி இருமல் படாத பாடுபடுத்தும். குடல் புண், வாய்ப் புண், தொண்டை எரிச்சல், நாக்கு சுவை உணர்வை இழத்தல், கண் பார்வை மங்குதல், தோல் சுருக்கம், கை கால் நடுக்கம், புற்றுநோய், நுரையீரலில் சளி கோத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத 'சி.ஓ.பி.டி.’ என்கிற நாள்பட்ட நுரையீரல் சுவாசக் குழாய் சுருக்கம் வரை இது கொண்டுபோகும்.


0 Comments