அண்மையில் வீழ்ந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் பொலன்னறுவை நகருக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும், நிபுணர்களும் பொலன்னறுவை விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பொலன்னறுவை திம்புலாகல, அரலகங்வில பிரதேசங்களில் விண்கற்கள் வீழ்ந்திருந்தன. இதனை சேகரித்திருந்த வானியல் ஆய்வாளர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றுக்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைத்திருந்தனர்.
குறித்த ஆராய்ச்சியில் விண்ணிலிருந்து வீழ்ந்த கற்களில் டைட்டானியம், தோரியம், யுரேனியம் போன்ற அரிய வகை உலோகங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உலகின் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளின் கவனம் பொலன்னறுவையை நோக்கி திரும்பியுள்ளது.
இந்நிலையில், நாசா நிறுவனத்தின் புகழ்பெற்ற பேராசிரியரான ரிச்சட் பிங் ஹுவர் மேற்கொண்ட பரிசோதனையில், குறித்த விண்கற்களில் அடையாளம் காணப்படாத நுண்ணுயிர்கள் மற்றும் இரண்டு வகையான பக்டீரியாக்களும் விண்கற்களில் உயிர்வாழ்வது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments