Subscribe Us

header ads

பொலிஸ் அதிகாரியின் முகத்தில் சிறுநீர் கழித்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி

பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றுமொரு பிரதி பொலிஸ் அதிகாரியின் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பமொன்று கொழும்பின் வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பின் வட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு புதிதாக பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து அங்கிருந்த பழை பிரதி பொலிஸ் அதிகாரிக்கும் புதிதாக நியமனம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் முறுகல் நிலை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் புதிய பிரதி பொலிஸ் அதிகாரி பொலிஸ் நிலையத்தின் ஓய்வு அறையில் தூங்கிகொண்டிருந்த போது பழைய பிரதி பொலிஸ் அதிகாரி அவருடை கட்டிலின் மேல் ஏறி அவருடைய முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புதிய பிரதி பொலிஸ் அதிகாரி முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

Post a Comment

0 Comments