Subscribe Us

header ads

பயன் தரும் மூலிகைச் செடிகளும் - தானியங்களும்"


கோதுமையை விட அதிக சத்துள்ள தானியம் - குதிரைவாலி 
-----------------------------------------------------------------

நமது நாட்டில் பண்டையக்காலம் முதலே சிறுதானியங்கள் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது மாறிவரும் நாகரிக வளர்ச்சியால் நகர்புற மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்திருந்தாலும்,தற்போதும் கிராமபுற மக்கள் தங்கள் அன்றாட உணவில் சிறுதானியங்களை பயன்படுத்தி வருகின்றனர்.சிறுதானியங்கள் பயிரிடப்படும் பரப்பளவும்,விளைச்சலும் மிக குறைந்த அளவே உள்ளன.

சிறுதானியங்களில் ஊட்டச்சத்துகளின் அளவு அதிகமாக உள்ளதால் அதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் குதிரைவாலி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,பீகார் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் திருச்சி, நெல்லை, விருதுநகர், மதுரை, கடலூர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர்.குதிரைவாலி தானியத்தில் இரும்புச்சத்து 6.82 மி.கி அளவு உள்ளது.இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும்,நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

சிறுதானிய வகையை சேர்ந்த குதிரைவாலியில் இட்லி, தோசை, பணியாரம், அதிரசம், பன், ரொட்டி,நூடுல்ஸ் போன்ற பல வகையான மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கலாம்.இட்லி,தோசையை செய்ய புழுங்கல் அரிசி,குதிரைவாலி தானிய புழுங்கல் அரிசி,உளுந்து,வெந்தயம்,உப்பு,தேவைக்கேற்ப தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கலாம்.

சாதாரண தோசையை காட்டிலும் குதிரைவாலி கலந்து தயாரித்த இதில்,புரதம்(6.30 கி), நார்ச்சத்து(3.71 கி), கால்சியம்(18.25 மி.கி),பாஸ்பரஸ்(119.76மி.கி), இரும்புச்சத்து(3.59 மி.கி)போன்ற ஊட்டச்சத்துகள் அதிகளவில் இருக்கும்.இட்லியில் நார்ச்சத்து(4.64 கி), பாஸ்பரஸ்(122.01 மி.கி),இரும்புச்சத்து(4.05மி.கி)இருக்கும்.

புழுங்கல் அரிசி,குதிரைவாலி புழுங்கல்,உளுந்து,உப்பு தேவைக்கேற்ப நறுக்கிய காய்கறிகள்,பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மிளகு, நல்லெண்ணெய், தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்தி பணியாரம் தயாரிக்கலாம்.சாதாரண பணியாரத்தை காட்டிலும் குதிரை வாலி கலந்து தயாரித்த பணியாரத்தில் புரதம்(9.63 கி),கால்சியம்(11.36 மி.கி),பாஸ்பரஸ்(132.02 மி.கி),இரும்புச்சத்து(5.54 மி.கி)

பச்சரிசி,குதிரைவாலி அரிசி, வெல்லம், ஏலக்காய்பொடி, எண்ணெய் தேவைகேற்ப பயன்படுத்தி அதிரசத்தை தயார் செய்யலாம்.குதிரைவாலி கலந்த அதிரசத்தில் புரதம்,நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும்.

மைதாமாவு,குதிரைவாலி அரிசிமாவு, உப்பு, சர்க்கரை, பிரட், வெண்ணெய், தண்ணீர் தேவைக்கேற்ப பயன்படுத்தி பன் அல்லது ரொட்டி போன்ற வற்றை தயார் செய்யலாம்.குதிரைவாலி கலந்து செய்த பன்,ரொட்டியில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும். மைதாமாவு,குதிரைவாலி அரிசிமாவு, உப்பு தண்ணீர் தேவைக்கேற்ப பயன்படுத்தி நூடுல்ஸ் தயாரிக்கலாம்.குதிரைவாலி கலந்த நூடுல்ஸ் புரதம்,நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும். குதிரைவாலி தானியத்தை கொண்டு அனைத்து வித உணவு பொருட்களையும் தயாரிக்கலாம்

Post a Comment

0 Comments