நான்கு மணி நேரத்தில் உலகின் எந்தவொரு பாகத்திற்கும் சென்றடையக்கூடிய விமானத் தயாரிப்பில் ஐக்கிய இராச்சியம் பெரும் முதலீடு ஒன்றினை செய்துள்ளது.
Skylon எனும் இந்த விமானத்தின் வடிவமைப்பு 2020 ஆம் ஆண்டில் பூரணப்படுத்தப்பட்டு பரீட்சிப்பில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலியை விட 25 மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் வல்லமையை உடையதாக இருக்கக்கூடிய இந்த விமானத்தின் இயந்திரம் தற்போது உள்ள சாதாரண விமானங்களில் இயந்திரத்திலும்
100 மடங்கு வேகம் குறைவானதாகவும், இதில் உள்ளடக்கப்படும் குளிரூட்டல் முறைமையின் ஊடாக வெப்பநிலையை 1/100 செக்கன்டுகளில் 1,000 டிகிரி செல்சியசிலிருந்து 150 டிகிரி செல்சியசிற்கு குறைக்கக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments