Subscribe Us

புத்தளம் - நுரைச்சோலை நிலக்கரி வழக்கு – அடுத்தமாதம் 18ம் திகதி விசாரணை

புத்தளம் - நுரைச்சோலை நிலக்கரி நிலையத்துக்கு நிலக்கரி விநியோகிப்பதற்கான கேள்வி பத்திரத்தை அறிவிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பாக நோபல் ரிசோர்ஸ் என்ற நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நேற்று உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்த போது, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இந்த கேள்வி அறிவிப்பின் ஊடாக தங்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மனுவில் இலங்கை கோல் கம்பனி நிறுவனம் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட தரப்புகள் பிரதிவாதிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 75 பேருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

இந்த மனு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

Post a Comment

0 Comments