Subscribe Us

வாக்காளர் பெயர் பட்டியலுக்கான விண்ணப்ப காலம் நிறைவடைகிறது

2015ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் பதிவு செய்துக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் காலம் இந்த மாதம் 12ம் திகதியுடன் நிறைவடைகிறது. 

தேர்தல்கள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

தேர்தல் வாக்காளர் பட்டியில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலாளர் காரியாலயம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அனைத்து கிராம சேவக அதிகாரிகள் காரியலயங்கள் என்பவற்றில் பரிசோதித்துக் கொள்ள முடியும். 

அத்துடன்  www.selection.gov.lk  என்ற இணையத்தளத்திலும் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments