Subscribe Us

header ads

Update>>> ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?: விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெடுப்பு

எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான KGL-9268 என்ற A-321 ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்நிலையில், புறப்பட்ட 23 நிமிடங்களில் சினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ரேடார் தொடர்பை இழந்தது. 

இதையடுத்து, விமானம் மாயமானது குறித்து நடத்தப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தில் 224 பேர் சென்றதாக தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், விபத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படும் இந்த விமானத்தின் உடைந்த பாகங்களை சினாய் தீபகற்ப பகுதியில் உள்ள மலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தகவல் தெரிவித்தபிறகு சம்பவ இடத்திற்கு உடனடியாக 45 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

எனினும், இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும், முகாந்திரமும் காணப்படவில்லை என எகிப்து பாதுகாப்பு ஏஜென்ஸிகள் தகவல் தெரிவித்துள்ளன. விமானம் விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் சினாய் பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், துருக்கி நாட்டின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் அந்நாட்டின் ‘எம்.16’ ரகப்போர் விமானங்கள் ரஷ்ய நாட்டு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்த துருக்கி மற்றும் ரஷ்ய அரசின் உயரதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.

Post a Comment

0 Comments