புத்தளம் முஸ்லிம் திடீர் மரண விசாரணை அதிகாரியாக கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து வரும் B.M.Hizam JP புத்தளம் மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்க செயலாளராக அண்மையில் சிலாபம் நகரில் 27 திடீர் மரண விசாரணை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏகமனாதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
செயற்திறனும், துடிப்பும் மிக்க Hizam இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை மூலம் புத்தளம் மாவட்டத்தில் திடீர் மரணங்கள் மூலம் ஏற்படும் எதிர்பாராத பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அதிகாரியாகவும் செற்பட அங்கீகாரம் பெற்றுள்ளார்.
நாடாளாவ ரீதியில் செயற்படும் தேசிய திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவராகவும் HizaM பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Mohamed Muhsi-


0 Comments