பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மதுகம, வெலிபன்ன பிரதேசத்தில் கிணக்குற்றுள் இருந்து சடலமொன்றை வெளியே எடுக்க உதவிய சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
63 வயதான நபரொருவர் 14 ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளார். எனினும் நேற்று பகலே பிரதேசவாசிகள் அவரது சடலத்தைக் கண்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த எம்.பி பாலித தெவரப்பெரும, சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். எனினும் இது குறித்து அறிவிக்கப்பட்டும் திடீர் மரண விசாரணை அதிகாரி நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்துக்கு வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் பாலித்த தெவரப்பெரும கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை மேலே எடுத்துள்ளார். சடலத்தை மேலே எடுப்பதற்கு முன்னர் களுத்துறை மாவட்ட செயலாளருடன் அவர் தொலைபேசியில் உரையாடி திடீர் மரண விசாரணை அதிகாரியின் காலதாம தம் குறித்து தெரிவித்துமுள்ளார்.

0 Comments