Subscribe Us

header ads

பில்லியன் டொலர் வைப்புகள் தொடர்பில் ராஜித வெளியிட்ட தகவல்கள்: தொப்பியை தானே அணிகிறாரா நாமல்?

கடந்த அரசின் முக்கியஸ்தர்களின் பெயர்­களில் வெளி­நா­ட்டு வங்­கி­களில் உள்ள 8 கணக்குகள்தொடர்பான  தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்­ச­ர­வை பேச்­சாளர் ராஜித  சேனா­ரட்ன தெரி­வித்தார்.

டொலர் வைப்புக்கள் தொடர்பான தகவல்களை யாருக்கும் மறைக்கமுடியாதென அமைச்சர் ராஜித தெரிவிக்கின்றார். மேலும் அவற்றை முடக்கி பணத்தை மீண்டும் இலங்­கைக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நட த்தப்பட்டு வருவதாக தெரிவிக்கும் ராஜித ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

கேள்வி- நாமல் ராஜபக்ஷ எம்.பி வங்கிக் கணக்கொன்றும் இல்லையென நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளாரே?

பதில்- நாம் நாமல் எனக் கூறவில்லையே , அவர் ஏன் பாய்கின்றார்? . இன்னும் ராஜபக்ஷக்கள் இருக்கின்றரே.  மற்றைய ராஜபக்ஷக்கள் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது அவர் மட்டும் ஏன் பேசுகின்றார்.

கேள்வி- அவருக்கே, அவரது குடும்பத்தினருக்கோ வெளிநாட்டு வங்கிகளில் பணமில்லை என அவர் கூறுகின்றாரே?

பதில்- அதையும்தான் பார்ப்போமே. விசாரணைகள் தொடர்கின்றன. எவ்வளவு பணம் இருக்கின்றது என்பதைப் பார்ப்போமே. ஒரு கணக்கில் 1.086 பில்லியன் டொலர், அடுத்த கணக்கில் 1.8 பில்லியன் டொலர்கள் , ஒரு கணக்கின் 500 மில்லியன் டொலர்கள் உள்ளன.

கேள்வி- அக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளனவா?

பதில்- நாம் கோரிக்கை விடுத்து சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். அவற்றை முடக்குவதற்கு. இவை அனைத்தும் டொலர் பரிமாற்றங்கள். டொலர்­களை எங்கு வைப்புச் செய்­தாலும் அது தொடர்­பான பதி­வுகள் அமெ­ரிக்க பெடரல் வங்­கிக்கு செல்லும். அமெரிக்க
பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்தபோது டொலர்கள் எங்கு வைப்புச்செய்யப்பட்டாலும் கண்டுபிடிக்க முடியுமென சொன்னார்கள்.  தற்போது அவர்கள் அவற்றை எமக்கு அறியத்தந்துள்ளனர்.

Post a Comment

0 Comments