Subscribe Us

header ads

‘கனுதெனு.Net’ இதுவொரு புதிய முயற்சி


- நீங்களாக விற்கவும் வாங்கவும் - என்ற மகுட வாசகத்துடன் வெளிவரும் கொடுக்கல் வாங்கல் வெளியீடு.

உங்களிடம் விற்பனை செய்யக்கூடிய பல பொருட்களும் சேவைகளும் இருக்கும். அதேநேரம் உங்களுக்கு ஒரு பொருளோ சேவையோ பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். இந்த இரண்டு பிரிவினரையும் சந்திக்கச் செய்யும் தளம்தான், ‘கனுதெனு.Net’.

_____________________________________________________

‘கனுதெனு.Net’ ஓர் அறிமுகம்:

இதுவொரு வெளியீடு. இதில் இரண்டு வகை வெளியீடுகள் உள்ளன. அதில் ஒன்று பத்திரிகை. இப் பத்திரிகை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரும்.

மற்றையது சமூக ஊடகங்கள். ‘கனுதெனு.Net’க்கென Website உருவாக்கப்பட்டுள்ளது. அதுபோல Facebook பக்கம், டுவிட்டர், வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஆகிய சமூக ஊடகங்களும் திறக்கப்பட்டு உள்ளன.
வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் விளம்பரங்கள் வடிவமைக்கப்படும்.
_____________________________________________________

‘கனுதெனு.Net’ இரண்டு பிரிவினரை இணைக்கின்றது:

உங்களிடம் விற்பனை செய்துகொள்வதற்காக இருக்கும் பொருளையோ சேவையையோ இப் பத்திரிகையின் ஊடாக விளம்பரம் செய்கின்றீர்கள். அப் பொருள்; சேவை பற்றிய விளம்பரத்தில் உங்கள் தபால் முகவரி, தொலைபேசி இலக்கம், ஈ-மெயில் ஆகிய உங்களைத் தொடர்புகொள்ளக் கூடிய விபரங்கள் பிரசுரிக்கப்படும். நீங்கள் வழங்கும் பொருள்; சேவை தேவைப்படுவோர் நேரடியாக உங்களைத் தொடர்புகொள்வர்.

அதுபோல, உங்களுக்கு ஒரு பொருளோ சேவையோ தேவைப்படும். அதையும் நீங்கள் இவ் வெளியீட்டில் விளம்பரப்படுத்துகின்றீர்கள். நீங்கள் தேடும் பொருள்; சேவை யாரிடம் உள்ளதோ, அவர் உங்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வார்.

இவ்வாறு, தேவைகள் உள்ள இரண்டு பிரிவினரையும் சந்திக்கச் செய்யும் ஓர் ஊடகமாக ‘கனுதெனு.Net’ தொழில்படும் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.____________________________________________________

‘கனுதெனு.Net’ விநியோக ஒழுங்குமுறை:

ஒவ்வொரு பத்திரிகை இதழும் 1000 பிரதிகள் அச்சிடப்படும். ஒரு தொகுதி பத்திரிகை இலவசமாக விநியோகிக்கப்படும். இவை மனிதர்கள் சேவை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருக்கும் இடங்களில் வைக்கப்படும். உதா: சலூன், டிஸ்பென்சரி, அலுவலகங்கள், வங்கிகள்...

இன்னுமொரு தொகுதி பத்திரிகை புத்தகக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படும்.
_____________________________________________________

‘கனுதெனு.Net’ பிரதேசம் தழுவிய விநியோகம்:

மேற்படி 1000 பிரதிகளையும் புத்தளம் பிரதேசம் முழுவதும் கிடைக்கக் கூடிய விதமாக பின்வரும் எண்ணிக்கையில் விநியோகிக்கப்படும்.
• புத்தளம் நகர சபை 500
• கரம்பை – கற்பிட்டி 200
• புழுதிவயல் – கொத்தான்தீவு ஊடாக உடப்பு – புளிச்சாக்குளம் - பாலாவி (கொழும்பு வீதி) 250
• இஸ்மாயில்புரம் – கரைத்தீவு எளுவன்குளம் 40
• தேசிய சுவடிக்கூட திணைக்களத்துக்கு 10

இதன் மூலம் உங்கள் விளம்பரம் புத்தளம் பிரதேசம் முழுவதும் பரவச் செய்வது உறுதியாகின்றது.

____________________________________________________

‘கனுதெனு.Net’இல் எவற்றை விற்கலாம்? வாங்கலாம்?

விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் அனுமதிக்கப்பட்ட (இலங்கை சட்டமும், சமயங்களும்) அனைத்தையும் – நீங்களாக வாங்கலாம் விற்கலாம் -.
_____________________________________________________

‘கனுதெனு.Net’ விளம்பர முறை:

இதன் பத்திரிகையில் கட்டம் போட்ட பகுதியும், சிறு விளம்பரப் பகுதியும் உள்ளன. கட்டம் போட்ட பகுதியில் படங்களுடன் விளம்பரம் செய்யப்படும். சிறு விளம்பரப் பகுதியில் படங்கள் இன்றி எழுத்துக்கள் மட்டும் இடம்பெறும்.

இதன் சமூக ஊடகங்களில் படங்களுடன் உள்ள விளம்பரங்கள் அப் படங்களுடனும், சிறு விளம்பரங்கள் எழுத்திலும் பிரசுரிக்கப்படும். வலைத்தளம் முதற்கொண்டு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஆகிய ஐந்து வகை சமூக ஊடகங்களிலும் இவ்வாறு பகிரப்படும்.
____________________________________________________

‘கனுதெனு.Net’ கட்டணங்கள்:

‘கனுதெனு.Net’ பத்திரிகை A3 (297 mm x 420 mm) அளவு கடதாசியில் அச்சிடப்படும். கட்டம் போட்ட விளம்பரங்கள் கால் பக்கம், அரைப் பக்கம் என அளவுக்கு ஏற்ப கட்டணம் அறவிடப்படும். சிறு விளம்பரப் பகுதியில் 25 சொற்கள், 50 சொற்கள் என இரண்டு அளவுகளில் சொற்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் அறவிடப்படும்.

சமூக ஊடகங்களில் முற்றிலும் இலவசமாக பிரசுரிக்கப்படும். தனியான கட்டணம் அறவிடப்படமாட்டாது.
_____________________________________________________

‘கனுதெனு.Net’வில் விளம்பரப்படுத்த என்ன செய்ய வேண்டும்:

வெகு சுலபம். கீழ் தரும் தொலைபேசி எண்கள் அல்லது ஈ-மெயில் மூலம் தொடர்புகொண்டு உங்கள் தேவையைக் கூறுங்கள்.

Office: 032 22 66635
Hotlines: 071 486 6965, 071 534 0040, 071 209 9370
E-mail ganudenunet@gmail.com
_____________________________________________________

‘கனுதெனு.Net’ வெளியீட்டாளர்:

இதுவொரு கூட்டு முயற்சி. மூவர் இணைந்து முயலுகின்றோம்.

1. A.M. Hisham Hussain
2. M.I. Mohamed Rushdi
3. M.I. Mohamed Infas

‘கனுதெனு.Net’ ஒரு புதிய முயற்சி. புத்தளத்தில் இருந்து முதன்முறையாக முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் வெற்றி வெளியீட்டாளர்களின் தொழில்வான்மை, இடையறா முயற்சியான்மை போன்றவற்றுக்கு மேலாக வாடிக்கையாளரின் திருப்தியில் தங்கியுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக, மனித முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் பாதங்களை அப் பணியில் ஸ்திரப்படுத்தும் எல்லா வல்ல அல்லாஹ்வின் பேரருள் மீது நம்பிக்கை வைத்தவர்களாக,

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ‘கனுதெனு.Net’ பத்திரிகையின் முதலாம் இதழும் Website உட்பட ஏனைய Social mediaக்களும் வெளியிடப்படும், 

Post a Comment

0 Comments