Subscribe Us

header ads

தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அல்ஹாஜ் M H ஹலீம் அவர்களின் முஹர்ரம் வாழ்த்து செய்தி.

இஸ்லாமிய வருடத்தின் 1437ம்  புது வருடம் உதயமாகும் முதல் மாதம் முஹர்ரம் என்ற இந்த மாதமாகும் . இந்த சிறப்பான மாதத்தில் எல்லாம் அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் ஸஹாபா பெருமக்கள் (ரலி) சத்திய இஸ்லாத்தின் நெறியை கட்டிக்காப்பதற்கு தியாகங்கள் பல செய்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு 1436 வருடங்கள் சென்றுவிட்டது.1437-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் நமது மார்க்கத்தை நாமும் தூய்மையான வழியில் பின்பற்றி பிறமத மக்களுக்கும் எங்கள் மார்க்கத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக்கொள்ளவும், நமது பாதையில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை எதிர்கொள்ளவும் தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும் இத்தருணத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.

பிறமத மக்களுடன் புரிந்துணர்வுடனும் மத நல்லிணக்கத்துடனும் வாழ பழகிக்கொண்டிருக்கும் நாம் அதே வேளை முஸ்லிம் நாடுகளில் தற்போது ஏற்பட்டிருக்கும் அனர்த்தங்களும் வெளிஉலக சூழ்ச்சிகளின் காரணமாக  குன்றி வரும் சகோதரத்துவமும் புரிந்துணர்வும் இல்லாததையிட்டு கவலை கொண்டுள்ளோம்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த இறை தூதரான மூஸா (அலை) அவர்களால் பிரவுன் என்ற கொடுங்கோல் ஆட்சியாளனை கடலில் அல்லாஹ் மூழ்கடித்துமூஸா (அலை) அவர்களைவெற்றி பெற செய்த நாள் இந்த மாதத்தில் தான் என யூதர்கள் நோன்பு நோற்றதை அறிந்த ரசூலுல்லாஹ் (ஸல்) உங்களைவிட மூஸா (அலை) அவர்கள் விடயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி தன் தோழர்களுக்கும்) ஏவினார்கள். . இதே போல் விஷமிகளின் சூழ்ச்சிகளை விட்டும் நம் நாட்டு மக்களுக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பை தேடுவதோடு மட்டுமல்லாமல் உலக முஸ்லிம் நாடுகளின் சகோதரத்துவ மனப்பான்மையை வளர்த்து ஒற்றுமையுடம் போராட வழிவகுக்க இறைவனை ரசூலுல்லாஹ் அறிவித்த நாற்களில் நோன்பு நோற்று பிரார்த்திப்போம்.

Post a Comment

0 Comments