Subscribe Us

header ads

50,000kg (ஆயிரம் கிலோ) க்கும் மேற்பட்ட கீரி மீன்கள் இன்று (14) கரைவலைகளில் சிக்கின

அம்பாறை, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை கடற்கரை பிரதேசத்தில் சுமார் 50 ஆயிரம் கிலோக்கு மேற்பட்ட கீரி மீன்கள் இன்று (14) மதியம் கரவலைகளில் சிக்கின.

இதில் அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவைச் சேர்ந்த வெள்ளத்தம்பி ஹாஜியார் என்பரின் கரைவலையில் சுமார் 25 ஆயிரம் கிலோக்கு மேற்பட்ட கீரி மீன்கள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கடந்த ஒரு வாரகாலமாக கரவலையில் மீன்கள் சிக்கிவருவதனால் பொதுமக்கள் அச்சம் கொண்டு காணப்படுகின்றனர். கடந்த காலம் சுனாமி அனர்த்தம் ஏற்படும் முன்னர் இவ்வாறுதான் கரவலைகளில் மிகக் கூடுதலான மீன்கள் பிடிபட்டு வந்ததாகவும், பின்னர் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதாகவும் பொதுமக்களும் கடல் மீன்பிடிப்பாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அபு அலா -

Post a Comment

0 Comments