Subscribe Us

உலகெங்கும் உலாவரும் புத்தகக் கண்காட்சிக் கப்பல் LAGOS HOPE தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது .

குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு அங்கு பெரிதாக எந்த சிறப்பம்சமும் இல்லை.

(இது கிறிஸ்தவ அமைப்பொன்றிற்கு சொந்தமானது)

இதுவரை கப்பலில் ஏறி பார்க்காதவர்கள் சென்று பார்க்கலாம்.

ஆனாலும் சிறுவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்திதான்.

உள்ளூர் கடைகளில் வாங்க முடியாத உயர்கல்வி நூல்கள் மற்றும் பிரபல எழுத்தாழர்களின் "கதை" நூல்களையும் இங்கே வாங்கலாம், எனினும் விலைகள் கைகளை சற்று கடிக்கவே செய்யும்.

👉துறைமுக ஊழியர்களுக்கு மட்டும் இலவசம்.

👉ஏனையோர்க்கு அனுமதி கட்டணம் 100 ரூபா.

👉65 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும்

12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கும் அனுமதி இலவசம்.

ஞாயிறு முதல் செவ்வாய் வரை பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையும்

புதன் முதல் சனி வரை காலை 10 முதல் இரவு 8 மணிவரையும் சென்று பார்க்கலாம்.

கோள்பேஸ் பக்கமாக வந்து துறைமுகத்திற்கு செல்லும் சைத்திய வீதியில் டிக்கட்டுகளை பெறவேண்டும், பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் கப்பலுக்கு அழைத்து செல்லப்படும்.

நவம்பர் 9 ம் திகதிவரை மேற்படி புத்தக கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.

குறிப்பு:

கப்பல் பார்க்க சென்று தேவையற்ற பித்னாக்களில் ஈடுபடாமல் உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

-அல்மஷூறா நியூஸ்

Post a Comment

0 Comments