Subscribe Us

header ads

பாராளுமன்ற உறுப்பினர் நவாவியா? மாகாண சபை உறுப்பினர் நியாஸா? பிரதேச சபை செயளாளர் KPC குமாரவா? (HSPA)கல்பிட்டி உயர் கல்வி மாணவர் அமைப்பின் கோரிக்கைக்கு????

பாலடைந்து கிடக்கின்ற அல் அக்ஸா தொடக்கம் அல் மனார் வரையிலான வீதியினை புணரமைத்துத் தருமாறு கோரி பொது மக்களின் கையொப்பங்களும், பள்ளிப் பரிபாலன சபைகளின் அணுசரனைக் கடிதங்களும் அடங்கிய மகஜரைக் கையளிக்கும் நோக்கில் நேற்று 2015.10.14 ம் திகதி புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் MHM. நவாவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஜனாப் நியாஸ், மற்றும் கல்பிட்டி பிரதேச சபை செளாளர் நாயகம் Mr. KPC. குமார. ஆகியோர்களது காரியாளயங்களுக்கு HSPA இன் தலைவர் SIFAS NASAR உற்பட நிருவாக உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டு மகஜரினைக் கையளித்ததோடு சிறிய கலந்துரையாடளினையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இம் மூன்று பிரதி நிதிகளும் வெகு விரைவில் இப் பாதையினை புணரமைத்துத் தருவதாக உத்தரவாதமளித்தனர். இன்னும் வட மேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் உடனடியாக எம்முடன் வந்து இப் பாலடைந்த வீதியினை பார்வையிட்டதோடு எமது காரியாலயத்திற்கும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஊடகப்பிரிவு

Post a Comment

0 Comments