Subscribe Us

header ads

நாட்டில் காணப்படும் உயரமான JLG Ultra Series Lift

JLG 1200 SJP Ultra Series Telescopic Lift தீர்வை தனது வாடிக்கையாளரான South Asia Gateway Terminals (Pvt) Ltd (SAGT)  க்கு யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் வழங்கியிருந்தது. நாட்டில் காணப்படும் மிகவும் உயரமான self-propelled telescopic Lift தீர்வாக இது காணப்படுகின்றது.

இந்த JLG ultra series telescopic boom Lift மூலமாக 120 அடி உயரம் வரை செல்ல முடியும் என்பதுடன், கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் SAGT இன் gantry crane களின் பராமரிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பயன்படுத்தப்படும்.
இதன் மூலமாக சர்வதேச கொள்கலன் கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் சமூகத்துக்கு, போட்டிகரத்தன்மை வாய்ந்த சேவையையும், கப்பல்களுக்கு சிறந்த quayside வினைத்திறனை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் JLG, கப்பல் போக்குவரத்து துறைக்கு அதிகளவு விருப்பைப் பெற்ற விநியோகத்தராக திகழ்கிறது. அண்மையில் நிறைவடைந்த Construct 2015 கண்காட்சியின் போது இந்த இயந்திரம் SAGT அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதன் போது, பொது மக்களுக்கும் இந்த சக்தி வாய்ந்த இயந்திரத்தை பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. JLG Ultra series booms கள் 1100,000 psi உருக்கிரும்பினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், போட்டியாளர்களின் உற்பத்திகளை விட 40% வலிமை வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்த இயந்திரங்கள் 1000 இறாத்தல் எடையை உயர்த்தக்கூடிய திறனை கொண்டுள்ளன. இதன் மூலமாக துறையில் காணப்படும் மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரமாக இது அமைந்துள்ளது.இந்த ஆண்டு இடம்பெற்ற Construct கண்காட்சியில் பங்குபற்றியோரின் கவனத்தை பெருமளவு ஈர்த்திருந்த அலகாக இந்த இயந்திரம் அமைந்திருந்தது.
முழுமையான இயங்கும் நிலையில், இலகுவாக 12 மாடி கட்டடத்தின் உச்சத்தை எய்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. 120 அடி உயரத்தில் செயற்படுத்துநருக்கு சௌகர்யத்தை வழங்கும் வகையில் தன்னியக்க platform leveling அம்சம் அமைந்துள்ளது.

UTE இல் வலு கட்;டமைப்புகள் மற்றும் பொருட்கள் கையாளல் தீர்வுகள் பிரிவின் பொது முகாமையாளர் மஞ்சுள விதானகே கருத்து தெரிவிக்கையில்,
“குறித்த வேலையை வேகமாகவும், பாதுகாப்பாகவும் முன்னெடுப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை UTE ஐச் சேர்ந்த நாம் அறிவோம். அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு செலவீனம் சேமிப்பு பெற்றுக் கொடுப்பது பற்றியும் நாம் கவனம் செலுத்துகிறோம். நான்கு தசாப்த காலமாக பணியாற்றிய அனுபவத்தை JLG கொண்டுள்ளது.
துறையில் காணப்படும் மிகவும் வினைத்திறன் வாய்ந்த Lift வகைகளில் Ultra boom lift series உள்ளடங்கியுள்ளன. எந்தவொரு உயரத்திலும் பராமரிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பொருத்தமான இந்த இயந்திரம், உருக்கு தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் பாரிய நிர்மாணப் பிரதேசங்கள் ஆகிய இடங்களில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானதாக அமைந்துள்ளன. 

21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து JLG தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்த்தராக UTE திகழ்கிறது. UTE இன் பொருட்கள் உதவி பிரிவின் மூலமாக இந்த இயந்திரங்களின் சேவை மற்றும் பராமரிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
JLG இன் விசேட பொருட் தொகுதிகளான Electric scissor lifts, Telehandlers, Diesel and electric powered boom lifts போன்ற இயந்திரங்களையும் UTE வழங்குகிறது. நாட்டின் முக்கிய நிறுவனங்களான ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், ஃபொன்டெரா பிரான்ட்ஸ் (பிரைவட்) லிமிட்டெட், ஹொல்சிம் லங்கா (பிரைவட்) லிமிட்டெட், ஏசியா பவர் ஸ்டேஷன் மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி லிமிட்டெட் ஆகியன UTE இன் வாடிக்கையாளர் வலையமைப்பில் உள்ளடங்கியுள்ளன.

Post a Comment

0 Comments