Subscribe Us

header ads

India vs S. Africa வடிவேல் கமெடி

நான் சுத்தி வளைச்சிப் பேச விரும்பல்ல. South Africa வப் பாத்துக் கேக்கிறன். Cricket விளையாடுறயா Baseball விளையாடுறயா?
என்ன பண்ணான் ஏ team காரன்? என்னையா தப்பு பண்ணான்? ஏதோ கடைசி match ல 300 target வெச்சான். அதுக்கு நீயும் இந்த match ல ஒரு 300 இல்லாட்டி 350 target வெச்சிட்டு விட்டுட வேண்டியதுதானே?! அதானேய்யா ஒலக வழக்கம். அத விட்டுட்டு அடுத்த match லயே கதறக் கதற 400+ அடிச்சித் தொவச்சிருக்கீங்க.
அட அது பரவாயில்லய்யா, ஆனா பின்னால இருந்த Behardin எல்லாம் அனுப்பி six அடிச்சிப் பழகிக்காடா எண்டு சொல்லி அசிங்கப்படுத்தி இருக்கீங்க நீங்க. இது match ஆ இல்லாட்டி நீங்க அடிச்சிப் பழகுறத்துக்கு caoching timeமா?
ஏதோ உள்ளூர் ground எங்கிறதுனால escape ஆகியிருக்கான்யா என் டீம். ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகி இருந்தா இந்த டீம யாரு காப்பாத்துறது அத நம்பி இருக்கிற supportersச யாரு maintain பண்றது?
இவ்வளவு ஏன் முன்னாடியும் மத்த டீம்களோட இது மாதிரி சாம்பவம் நடந்திரிக்கிது.
இதே டீம ஒரு நாட்டுக் காரன் வச்சி அடி அடி எண்டு அடிச்சிரிக்கான்யா. ஆனா அவன் இந்த அளவுக்கு எங்க சொந்த நாட்டிலேயே அசிங்கப் படுத்தல. அவனோட நாட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் வலி தெரியாம அடிச்சிப் பிரிச்சு மேஞ்சிருக்கான். அதுவும் பிள்ளக்கி வலிக்கக் கூடாது எங்கிறதுக்காக T20 ல ஒண்ணு ரெண்டு match ல எங்கள வெல்ல வெச்சிட்டு அப்புறமா அடிச்சிக்கிருன்கான்யா.
அந்த நாகரிகம் கூடவா ஒனக்குத் தெரியாது?
என்னா அடி, bit gap கூட குடுக்காமப் போட்டு அடிச்சிருக்க நீயி. எப்படியெல்லாம் Ball போட்டுப் பாத்தான் என் டீம் காரன். இரக்கமில்லையா உனக்கு. அவன் தொடந்து ரெண்டு wide Ball போடும்போதே தெரியல்லையா பைய பயத்துல பீதி ஆயிட்டான் எண்டு.
வேணா! எங்ககிட்ட வேணா. எங்களுக்கும் இந்த மாதிரி Cricket தெரியும் ஆனா நாங்க அடிக்க மாட்டம், அடிக்கவும் தெரியாது எங்களுக்கு.

Post a Comment

0 Comments