பாகிஸ்தானின் நபரொருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு நடு வீதியில் ஓடிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரி விதிப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் நபரொருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்தான் நகரைச் சேர்ந்த ஷஹ்பாஸ் அஹ்மெட் என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு வீதி வழியாக ஓடியுள்ளார்.
இதனையடுத்து அவ்வழியாகச் சென்றவர்கள் அவரது உடலில் பரவிய தீயை மண்ணைத் தூவி அணைத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடும் எரிகாயங்களுக்குள்ளாகி உடலில் 80 சதவீதமான பகுதி எரிந்து கருகிய ஷஹ்பாஸ் அஹ்மெட்டின் உடல்நலம் கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments