வழக்கு விசாரணையில் ஆஜராகத் தவறியமை காரணமாக, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசாரா தேரர் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரணடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
புனித குரானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பலசேன அமைப்பின் ஊடகவிலயாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து சர்சையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் விசாரணைகளுக்காக எடுத்துகொள்ளப்பட்டபோது, கலகொட அத்தே ஞானாசாரா தேரர் உள்ளிட்ட மூவர் ஆஜராகத் தவறியமையால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட புதிய போக்குவரத்து ஒழுங்கு காரணமாக ஏற்பட்ட வீதி நெரிசலில் நீதிமன்றத்துக்கு வருகைதர ஐந்து நிமிடங்கள் தாமதமாகியதாகவும் இதனாலேயே நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போனதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments