Subscribe Us

வயது வந்தோருக்கான ஓரியோவின் மாபெரும் வானவில் சறுக்கு மரம்...

பழமையான பிஸ்கெட்கள் பலவற்றை ஓரம்கட்டிவிட்டு, உலகெங்கிலும் உள்ள டீ பருகுவோரின் விருப்பமாக இருக்கும் ஓரியோ கிரீம் பிஸ்கெட்கள், தமது புதிய வகை பிஸ்கெட்டை இங்கிலாந்தில் அறிமுகம் செய்கிறது.

இதற்காக மேன்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கும் அறிமுக விழாவில், ரெயில் நிலையம் அருகே ஒரு நாளைக்கு மட்டும், வயது வந்தோருக்கான ஓரியோ வடிவ கதவுடன் உள்ள மாபெரும் வானவில் சறுக்கு மரத்தை அமைத்துள்ளது.

இந்நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இதில் விளையாடலாம். சறுக்கு மரம் போன்ற விளையாட்டு நாள் முழுக்க வேலை செய்து களைத்துப்போனவர்களுக்கு, மன நிம்மதியளிக்கும் என நம்புவதாக இந்நிறுவனத்தின் நிர்வாகி தெரிவித்தார்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து நாட்டினர், சறுக்கு மரத்திலிருந்து கீழே இறங்கும்போது, ஓரியோ பிஸ்கெட்டின் கிரீமுக்குள் குதித்தால் நன்றாக இருக்கும்’ என தமது விருப்பங்களை வெளியிட்டு வருகின்றனர்.
z

Post a Comment

0 Comments