அபு அலா –
உலகளாவிய ரீதியில் சிறந்த ஆயுள்வேத துறையை நாம் வழங்க வேண்டும் என சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் அதிகாரிகளுக்கு பணிப்பு.
நாட்டின் ஆயுள்வேத வைத்தியத்துறையை அபிவிருத்தி செய்து உலக நாடுகளுக்கிடையில் சிறந்த ஆயுள்வேத வைத்திய சேவையை வழங்குவதை நோக்காகக் கொண்டு சுகாதார அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் இத்துறையை மென்மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பைசால் காசிம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக சுகாதார பிரதி அமைச்சரின் சுதேச மருத்துவ அபிவிருத்தி திட்டத்தின் விஷேட ஆலோசகரும் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர் இன்று (06) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் ஆயுள்வேத சுகாதாரத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும், ஆயுள்வேத வைத்தியத்திலுள்ள குறைபாடுகள் சம்பந்தமாக கடந்த வியாழக்கிழமை ராஜகிரியவிலுள்ள ஆயுள்வேத போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள சுதேச மருத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் பைசால் காசிம் கேட்டறிந்து கொண்டதுடன் ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களின் வேலையை அபிவிருத்தி செய்வதற்கும் கிராமிய மட்டத்தில் மருத்துவ மூலிகைத் தாவரங்களை உறுவாக்குவது தொடர்பான செயற்திட்டங்களையும் பிரதி அமைச்சர் முன்வைத்தார்.
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆலோசனைக்கு அமைவாக ஆயுள்வேத வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனரத்தினவுடன் இணைந்து வைத்திய அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டும் பல வகையான முன்னெடுப்புக்களை எதிர்வரும் 5 வருட காலத்துக்குள் சுகாதார அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
எனவே ஆயுள்வேதத் துறையை அபிவிருத்தி செய்து ஆயுள்வேத மருத்துவத்துறை தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டுமென பிரதி அமைச்சர் பைசால் காசிம் அன்றைய கலந்துரையாடலின்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் சுகாதார பிரதி அமைச்சரின் சுதேச மருத்துவ அபிவிருத்தி திட்டத்தின் விஷேட ஆலோசகரும் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.
0 Comments