Subscribe Us

header ads

மட்டக்களப்பில் மாபெரும் விஷேட சர்வமத நிகழ்வுகள்

பௌர்னமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் விஷேட சர்வமத நிகழ்வுகள் நேற்று செவ்வாய்கிழமை (27) மட்டக்களப்பு நகரத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்டின் பெணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், வட மத்திய மாகாண முதலமைச்சர் சொய்சா ஜெயரத்தன, கிழக்கு  மாகாண சுகதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரி சேவைகள், சிறுவர் நன்நடத்த மற்றும் கிரமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் முதலாவது நிகழ்வாக மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரை விகாராதிபதி பூஜ்ய கம்பிட்டிய சுமனரத்ன தேரரினாலும், மரியாள் பேராலயம் ஆயர் பொன்னய்யா யோசப் மற்றும் அருட் தந்தை ஆகியோரினாலும், ஜாமிஉஸ் சலாம் ஜூம்ஆப் பள்ளிவாயல் பேஸ் இமாம் மௌலவி எம்.ஐ.எம்.நழீமினாலும், வீர கத்தி பிள்ளையார் ஆலயம் குருக்கலினாலும் விஷேட பூஜைகள் நடாத்தி வைக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்டின் பெணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், வட மத்திய மாகாண முதலமைச்சர் சொய்சா ஜெயரத்தன ஆகியோர்களுக்கு மட்டக்களப்பு நகர ஜாமிஉஸ் சலாம் ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தின் சார்பாக பிரதி தலைவர் எம்.இக்பாலினால் பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக இந்நிகழ்வுக்கு கலந்துகொள்ள இருந்த நாட்டின் ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேனா கலந்துகொள்ள முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

பைஷல் இஸமாயில் -

Post a Comment

0 Comments