கொழும்பில் இன்று நடைபெற்ற சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.
மரதன் ஓட்டப் போட்டி இன்று காலை கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் ஆரம்பமானது.
5 கிலோமீட்டர் தூர மரதன் ஓட்டப்போட்டியில் இணைந்த மஹிந்த ராஜபக்ச அதனை 50 நிமிடத்தில் நிறைவு செய்துள்ளார்.
கொழும்பு சர்வதேச மரதன் போட்டி 5 கிலோ மீட்டர் ஒருகொடவத்தை சந்தியில் நிறைவடைகின்றது.
பிரதான மரதன் ஓட்டப்போட்டி பொரளை, தெமட்டகொட, பேஹேலியகொட, வத்தளை ஊடாக ஹெமில்டன் கால்வாய் அருகில் அமைந்துள்ள வீதியில் பமுனகம ஊடாக நீர்கொழும்பு கடற்கரை பூங்கா அருகில் நிறைவடைந்துள்ளது.
ஓட்டப்போட்டியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுகளைச் சேர்ந்த ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments