Subscribe Us

header ads

175 கிலோ மான் மற்றும் மரை இறைச்சியுடன் 4 பேர் கைது (photos)

பொதி செய்யப்பட்டும், பொதி செய்வதற்கு தயாரான நிலையில் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 175 கிலோகிராம் மான் மற்றும் மரை இறைச்சியை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள சுற்றுவட்ட அதிகாரி என்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர் தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தொகுதியைச் சுற்றிவளைத்தபோது, மான் இறைச்சியை வெட்டி துப்புரவு செய்து பொதியிட்டுக் கொண்டிருந்த சந்தேக நபர்களையே கைது செய்ததாகவும் அவர் கூறினார். 


இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதிக் காடுகளிலிருந்து இறைச்சிக்காக இந்த மான்களும் மரைகளும் வேட்டையாடப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments