
அந்த செய்தி வெளியானவுடன் சங்கை ரிதுவான் பக்கத்தின் சார்பாக கண்டன பதிவு வெளியிடப்பட்டு அதே பதிவில் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு துறையான Ministry Of Defence க்கு ஆயிரக்கணக்கான புகார் மனு அனுப்பப்பட்டது.
மேலும் தினமலரின் இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரத்தையும், சவூதி அரசுக்கு எதிரான ஊடக பிரச்சாரத்தையும் ரியாத்தில் பணி புரிந்த சங்கை ரிதுவான், முஹம்மது இம்தியாஸ், முஹம்மது நிசார், ஆரிப் ரஹ்மான், ஷேக் அலாவுதீன் ஆகிய சகோதரர்களால் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலுள்ள Ministry Of Defence அலுவலகத்தில் நேரில் புகார் மனுவும், தினமலர் செய்து வந்த அனைத்து அவதூறு பிரச்சாரத்தையும் ஆதாரத்தோடு கொடுக்கப்பட்டது.
அந்த செய்தி அப்பொழுதே சங்கை ரிதுவான் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தினமலர் இஸ்லாத்திற்கு எதிராக செய்து வந்த அனைத்து அயோக்கியத்தனத்தையும் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில்….
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு சவூதி அரேபியாவிலே தினமலருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே….!!
source: முகநூல் முஸ்லிம் மீடியா
0 Comments