Subscribe Us

header ads

மனைவியை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவன் கைது

தனது மனைவியைக் கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சிலாபம் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்தில் ஏறி எதிர்ப்பைத் தெரிவிக்கத் தயாரான நபரொருவரை, கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

சிலாபம் சேதவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் நிசாந்த குமார (வயது 36) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நபரின் மனைவி, சிலாபம் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவினரால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிலருடன் சேர்த்து குறித்த தினத்தன்று கைது செய்யப்பட்டார்.  

தனது மனைவி நியாமற்ற வகையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்து இந்நபர், தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக மணிக்கூட்டுக்கோபுரத்தில் ஏற முயற்சித்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இது தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் வசந்த ஹேரத்திடம் கேட்ட போது, குறித்த நபரின் மனைவி கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை விடுதலை செய்யுமாறு கோரி இந்நபர் மணிக்கூட்டுக் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக கிடைத்த தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார். 

-முஹம்மது முஸப்பிர்

Post a Comment

0 Comments