திருமணத்தன்று மணமகள் கோலத்தில் அடிபட்டவர்களுக்கு உதவி செய்ய ஓடோடி வந்த மருத்துவ உதவியாளர் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாநிலத்தில் உள்ள கிளார்க்ஸ்வில்லி நகரில் தனது திருமணத்துக்கு முழு அலங்காரங்களுடன் தயாரான மணமகள் சாரா ரே, புறப்பட்டு போகும் வழியில் இவரது உறவினர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
அடக்கமான மணமகளாக தனது வாகனத்தில் அமர்ந்து, போலீசார் வரட்டும் எனக் காத்திருக்காமல், அவசர முதலுதவி சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வரும் சாரா, விபத்து பகுதிக்கு ஓடோடி வந்தார். தனது மகளின் பொறுப்புணர்வைக்கண்ட சாராவின் தாயார் தானடைந்த பெருமித நொடியை உலகுக்கும் காண்பிக்க எண்ணி அவரைப் புகைப்படம் எடுத்து தனது சமூகத்தள பக்கத்தில் வெளியிட்டார்.
ஒரே நாளில் இந்தச் செய்தி வைரலாகிப் போனது. எனினும், சாரா ‘பொதுவாக அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவோர் யாராயினும், இத்தகைய சூழலில் என்னைப் போலத்தான் நடந்துகொண்டிருப்பார். ஆகவே, நான் மாபெரும் காரியம் எதையும் செய்து விடவில்லை’ என அடக்கத்துடன் தெரிவித்தார்.

0 Comments