ஆதரவற்ற நிலையில் பஸ் தரிப்பிடத்தில் காணப்பட்ட வயோதிப பெண் ஒருவரை எல்ல பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
நேற்றிரவு ஹல்பே பஸ் தரிப்பிடத்தில் இருந்த குறித்த பெண் தொடர்பான தகவல் எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன்படி குறித்த இடத்திற்கு சென்ற எல்ல பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் வயோதிபப் பெண்ணை அழைத்துச் சென்று அவரை பொறுப்பெடுத்துள்ளனர்.
80 வயதுடைய குறித்த பெண் தனது பிள்ளைகள் தொடர்பிலோ அல்லது உறவினர்கள் தொடர்பிலோ தகவல்களை வௌியிட மறுப்பதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் அந்தப் பெண்ணை கைவிட்டுச் சென்றவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments