நமது ஊரிலும் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளாள் குற்றம் செய்தவர் என்று சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டும் இருக்கிறார் .. இதன் மேலதிக விடயங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன .
இந்த நேரம் நாடு தழுவிய வகையிலும் , நமது நகரிலும் சில ஊடகங்களும் ,தொண்டு நிறுவனங்களும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர் - இது வரவேற்கப்பட வேண்டியதும் , பாராட்ட பட வேண்டியதுமாகும் .
இதே நேரம் இன்னொரு பக்கம் குற்றம் புரியும் பெரியவர்கள் இனிவரும் காலங்களில் குற்றம் இழைக்காது இருக்க நாம் என்ன செய்யலாம் ? என்ற கேள்வியும் உள்ளது..
வெள்ளிக்கிழமை சகல பள்ளிவாசலிலும் விபச்சாரம் , பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் ஜும்மா பயான் நடத்துவதோடு அதை தொடர்ந்து இமாம் சொல்லி கொடுக்க ஜமாத்தினர் சொல்லும்படியான ஒரு சத்தியத்தை அல்லாஹ்வை சாட்சியாய் வைத்து சொல்ல வைத்தால் என்ன?
குறைந்த பட்சம் நமது ஊரிலேனும் இதை செய்து காட்டி முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரியாய் விளங்குவதோடு, மாற்று மத நண்பர்களையும் அவர்களின் வணக்கஸ்தலங்களில் செய்விக்கும் ஒரு முன்னுதாரணம் உள்ளோராய் நாம் மாறலாமே ?
உதாரணம் -
யா அல்லாஹ் சகல பாவங்களில் இருந்தும் உனது பாதுகாவலை தேடுகிறேன் ..
விபச்சாரம் போன்ற கொடிய செயல்களில் இருந்தும், பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளிலும் நான் ஈடுபட மாட்டேன் என சாட்சி கூறுகிறேன்...
பார்க்கின்ற பழகுகின்ற அனைத்து பெண்களையும் நான் எனது தாயாக , சகோதரியாகவே இனி வரும் காலங்களில் பார்ப்பேன் ...
எந்த காரணம் கொண்டும் கட்டிய மனைவிக்கோ , அப்படி இல்லையேல் கட்ட போகும் மனைவிக்கோ துரோகம் இழைக்க மாட்டேன்...
பணி புரியும் இடங்களிலும் பணியாற்றும் சக பெண்களோடு மிகவும் நாகரீகமாகவும் , மரியாதையுடனும் நடந்து கொள்வேன்....
இவ்வாறு தொடரும் ஒரு உறுதி மொழியை நமது சகோதரர்களிடம் எடுக்க முடியாதா ?
இது நன்று எனில் நடைமுறை படுத்தும் பணியை புத்தளம் பெரியபள்ளி, ஜமியதுல் உலமா போன்றோர் முன்னெடுக்கலாம் ...
உங்களோடு இணைந்து ஒத்துழைப்பு நல்க நாமும் தயார் .
-Mohamed Infas-


0 Comments