Subscribe Us

புத்தளம் தில்லையடியில் பாழடைந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதே பிரதேசத்தில் வசிக்ககூடிய 50 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் இதுவென்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 

குறித்த பெண் எவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை என்பதுடன், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

0 Comments