Subscribe Us

header ads

கொழும்பு நகரில் தீவிர முஸ்லிம் இனவாதம் தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா அமைப்பு கடுமையான குற்றச்சாட்டு

கொழும்பு நகரில் தீவிர முஸ்லிம் இனவாதம் தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா அமைப்பு கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் செயற்பட்டு வருவதாக பொதுபல சேனா நீண்டகாலமாக முன்வைத்து வரும் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் தேசிய அரசாங்கத்தின் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், கொழும்பில் முஸ்லிம் இனவாதிகள் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு பார்பர் வீதி கோயிலின் தேர்த்திருவிழாவை இந்த இனவாதிகள் தடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் கோயிலின் நிர்வாகக் குழுவினருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணை நடத்தி கொழும்பில் செயற்படும் முஸ்லிம் இனவாதத்தை வேரோடு களைய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிலந்த விதானகே தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments