இலங்கைத் துறைமுக அதிகார சபை முற்றுமுழுக்க ரணதுங்க குடும்ப ஆதிக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து தொழிற்சங்கங்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளன.
துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது மூத்த சகோதரர் தம்மிக்க ரணதுங்கவை இலங்கைத் துறைமுக அதிகார சபையின் தலைவராக அண்மையில் நியமித்திருந்தார்.
அதற்கு மேலதிகமாக அவரது அமைச்சில் ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் மற்றும் தொடர்பாடல் அதிகாரிகளாக அவரது குடும்பத்தைச் சேர்ந்த பத்துப் பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அத்துடன் துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் சபைக்கும் ரணதுங்க குடும்ப உறுப்பினர்கள் இருவர் மற்றும் ரணதுங்க குடும்பத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறாக துறைமுக அதிகார சபை முற்றுமுழுதாக ரணதுங்க குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் வந்திருப்பது துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments