Subscribe Us

header ads

சவுதி அராபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் இன்னலில்

தனது மனைவி கடந்த வருடம் சவுதி அராபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்று பாதிப்புக்கு உள்ளாக்கியிருப்பதாக திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

நிரோஷனி டயஸ் எனும் குறித்த பெண் சுகவீனமுற்றுள்ள நிலையில் இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரின் கணவர் அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் குறித்த பெண் சவுதி அராபியாவின் ரியாத் நகருக்கு சென்றிருந்தார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் சுகவீனமுற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சவுதி அரேபியாவில் இன்னல்களை எதிர்நோக்கி வரும் குறித்த பணிப்பெண்ணை எமது செய்திச்சேவை தொடர்பு கொண்டது.

அவர் பல நாட்களாக இன்னல்களையும், சுகவீன நிலையையும் எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக எமது செய்திச் சேவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், செயற்றிட்ட பணிப்பாளருமான உப்புல் தேசப்பிரியவை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர் இன்றைய தினத்திற்குள் இந்த விடயம் தொடர்பாக பணியகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு பற்றி கவனம் செலுத்தி துரித தீர்வை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments