பசுபிக் கடலில் கலபகோஸ் தீவில் புதிய வகை இராட்சத ஆமை ஒன்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அங்குள்ள 250 ஆமைகளின் மரபணுக்களைச் சோதித்ததில் அவை அங்குள்ள அமைகளிடமிருந்து மாறுபட்டவை எனத் தெரியவந்துள்ளதாக ஈக்வெடார் நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்தார்.
அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆமை வகைகளில் இதுவும் ஒன்று ஆகும். இவற்றில் 4 வகைகள் ஏற்கனவே அழிந்துவிட்ட நிலையில் இந்த கண்டுபிடிப்பானது, அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த ஆமைகளைப் பாதுகாக்க உதவும் என விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர்.
0 Comments