கொழும்பு நகரிலுள்ள வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் புதிய பாதையொன்றை நிர்மாணிக்கும் திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்படி, பத்தரமுல்லை பொல்துவவிலிருந்து உடுமுல்ல ஊடாக இந்த புதிய பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வின் போது மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
நான்கு பிரிவுகளை கொண்டு நிர்மாணிக்கப்படுகின்ற இந்த புதிய பாதைக்காக 316 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் பத்தரமுல்லை நகரிலிருந்து மாலபே, கடுவளை ஆகிய நகரங்களுக்கும், களனியவிற்கும் மிக இலகுவாக பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


0 Comments