ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 10.10.2015)
வக்கற்ற சமூகம்
ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதும், சுயத்தை காப்பாற்றுவதும், பிரச்சினைகளை தீர்த்து வைப்பதும், அரசியல் அதிகாரத்தையும் இருப்பையும் தக்கவைத்துக் கொள்வதும் அலாவுதீனின் அற்புத விளக்குகளை வைத்துக் கொண்டோ அல்லது சோளக்காட்டு காவல் பொம்மைகளை வைத்துக் கொண்டோ நடந்து விடுகின்ற காரியமல்ல. அதற்காக குறிப்பிட்ட சமூகமும் அதன் எல்லா மட்டத்திலும் உள்ள தலைவர்களும் கடுமையாக உழைக்க வேண்டும், குரல்களை மேலெழுப்பி பேச வேண்டும், அர்ப்பணிப்பு செய்ய வேண்டும். ஆனால், முஸ்லிம் சமூக கட்டமைப்பில் இவ்வாறான நிலைமை இல்லை.
இலங்கைச் சோனகர்கள் என்று முன்னொரு காலத்தில் அழைக்கப்பட்ட இச் சமூகம் இன்று வக்கற்ற மக்களையும் சுரணைகெட்ட தலைவர்களையும் கொண்ட ஒரு இனக் குழுமமாக மாறியிருக்கின்றது. மக்கள் தானுண்டு தன்பாடுண்டு என்று இருக்கின்றார்கள். இந்த நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட, தற்போது முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் பற்றிய அவர்களது அக்கறை என்பது பேஸ்புக்கில் ஒரு 'லைக்' போடுவதுடன் முடிந்து விடுவது போலத்தான் தெரிகின்றது. அவர்களை வழிநாடாத்துகின்ற அரசியல்வாதிகள் மற்றும் சமயத்தலைவர்களின் நிலை இதை விட மோசமானது.
கடந்தகால துயர்
குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருவித வியாபார புத்தியுடையவர்களாக மாறியிருக்கின்றார்கள். இதில் சிலர் தமக்கு கிடைக்கின்ற அமைச்சு மற்றும் எம்.பி. பதவிகளை வைத்து தமது மனைவி பிள்ளைகளின் வங்கிக் கணக்குகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். வேறு சிலர் கட்சியை பேரம் பேசி விற்றே அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சமூகத்தின் மக்கள்; தம்முடைய தலைவர்கள் என்று தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்ற எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் உண்மைக்குண்மையாக அந்த மக்களுக்கு நேர்மையாக செயற்படவில்லை என்பதை மக்களுக்கு காலம் உணர்த்தத் தொடங்கியிருக்கின்றது. அநேக முஸ்லிம் அரசியல்வாதிகளை பார்க்கும் போது - இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான் என்கின்ற வடிவேலுவின் காமடிதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
இலங்கை முஸ்லிம்கள் 1915ஆம் ஆண்டிலேயே இனவாதத்தின் நெருக்குவாரத்தை எதிர்கொண்டு விட்டனர். 1970களிலும் 80 களிலும் பல தடவை இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு இடம்பெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் சிக்குண்டு முஸ்லிம்கள் அனுபவித்த இழப்புக்கள் மிக அதிகமானவை. அதுமட்டுமன்றி, யுத்தம் முடிவடைந்த பிறகும் அதாவது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பௌத்த கடும்போக்கு சக்திகளின் இனவாத அடக்குமுறைகளை முஸ்லிம்கள் பரந்தளவில் எதிர்கொள்ள நேரிட்டது. ஹலால், அபாயா என்று ஆரம்பித்த இன ஒடுக்குமுறைச் செயற்பாடுகள் அளுத்கம கலவரம் வரை நீண்டு, மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தின. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிக இலகுவாக இனக்கலவரம் ஒன்றை முடுக்கிவிடுதற்கான எல்லா முகாந்திரங்களும் முஸ்லிம்களுக்கு இருந்தன. ஆயினும், முஸ்லிம்கள் மிகவும் பொறுமை காத்ததால் பேரழிவுகள் தடுக்கப்பட்டன.
முஸ்லிம்கள் இத்தனை பிரச்சினைகளை சந்தித்த போதும், முஸ்லிம் தலைவர்கள் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பலர் வாயைத் திறக்கவேயில்லை. மஹிந்தவுக்கு எதிராகவோ அதற்கு முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிராகவோ குரல்கொடுப்பதற்கு அநேக முஸ்லிம் அரசியல்வாதிகள் பின்வாங்கினர். அவ்வாறு பின்வாங்குவதற்கும் சாணக்கியம், தொலைநோக்கு என்று ஏதாவது ஒரு மாயப் பெயரை வைத்திருந்தார்கள். இலங்கை முஸ்லிம்களின் தேசிய கட்சி எனச் சொல்லப்படுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைமையோ, புதிய விமோசனம் அளிக்கப்போவதாக கூறிக் கொள்கின்ற மக்கள் காங்கிரஸ் தலைமையோ, வியூகங்களை வகுக்கும் ஞானம் பெற்ற தேசிய காங்கிரஸ் தலைமையோ அல்லது பௌஸியோ, பைசர் முஸ்தபாவோ, அஸ்வரோ, அமீர் அலியோ, அன்றேல் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களோ இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழ் தலைவர்கள் தமது சமூகத்திற்கும் குரல் கொடுக்கும் அளவுக்கு குரல்கொடுக்க இல்லை. ஒரு உண்ணாவிரதத்தை அல்லது வேறு வழியிலான சாத்வீக போராட்டத்தை நடத்தவில்லை. பாராளுமன்றத்திற்குள் தமது சமூகத்திற்காக கடைசி மட்டும் கதைக்காமல் இருந்தவர்கள் ஏராளம் பேர். முஸ்லிம் சமூக அரசியலானது இந்த இலட்சணத்தில்; இருந்தமையால் மக்கள் எதிர்கொண்ட சிவில், சமூக பிரச்சினைகள் அப்படியே கிடப்பில் கிடந்தன.
இப்போது நல்லாட்சி ஏற்பட்டு விட்டது அல்லது அவ்வாறான ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. மஹிந்த ஆட்சியில்தான் எதுவும் செய்ய முடியாது வெள்ளை வேனை அனுப்பிவிடுவார்கள் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் அஞ்சிநடுங்கிக் கொண்டு எதுவும் பேசாதிருந்தனர். இப்போது அவர்களுக்கு என்னவாயிற்று? மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கின்றார், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிக்கின்றார். இதற்குத் தானே இந்த பாலகுமாரர்கள் எல்லோரும் ஆசைப்பட்டனர். மைத்திரி – ரணில் இணைந்த அரசாங்கமொன்றை உருவாக்க வாக்களிக்குமாறுதானே மக்களிடமி கோரினர். இப்போது மக்கள் அதற்கான சந்தர்ப்பத்தை தந்திருக்கின்றனர். அரசியல்வாதிகள் சாதித்துக் காட்ட வேண்டியதுதானே! இன்னுமென்ன தாமதம்?
இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு பெரிதாக பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும், நல்லாட்சி அரசாங்கம் அமைந்திருப்பதால் இருக்கின்ற சிறு சிறு பிரச்சினைகள் தானாக தீர்ந்துவிடும் என்றும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் கருதுவதாக தெரிகின்றது. ஆனால் உண்மையின் முகம் வேறுமாதிரியானது. முஸ்லிம்களுக்கு பெருமளவிலான பிரச்சினைகள் இருக்கின்றன. இதனை வெளிக்காட்டுவதும் அதற்கெதிராக குரல் கொடுப்பதும் தமது அமைச்சுப் பதவிகளுக்கும் அரசாங்கத்துடனான உறவுக்கும் பாதகமாக ஆகிவிடும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். அதனால், நோகாமல் நொங்கு எடுப்பதற்கான காலம் வருமென்று கூறிக் கொண்டே பல வருடங்களாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை காண்கின்றோம்.
கிளுகிளுப்பு அரசியல்
முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் பலவிதமானவை. அவை ஓரிரவுக்குள் தீர்த்து வைக்கப்படக் கூடியவையல்ல. எனவே நீண்டகாலம் பாடுபட வேண்டும். குறிப்பாக, வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள் குடியேற்ற வேண்டியிருக்கின்றது. தமிழர் அரசியல் மேற்கொண்ட அயராத முயற்சியால் பெருமளவான தமிழ் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டனர். இருப்பினும் முஸ்லிம் அரசியல் தளத்தின் சோம்பேறித்தனத்தால் இன்னும் கணிசமான முஸ்லிம்கள் உள்நாட்டில் இடர்பெயர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்;.
அதேபோல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணிப் பிரச்சினை மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தொடர்பான முரண்பாடுகள் தீர்த்து வைக்கப்பட வேண்டியிருக்கின்றது. இராணுவத்தினரால் கையப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல், அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான கொடுப்பனவு, போலி காணி உறுதிகள் தயாரிக்கப்பட்டு சட்ட விரோதமாக கபளீகரம் செய்யப்பட்ட காணிகள் தொடர்பான பிணக்குகளை தீர்த்தல், மாற்று சமூகத்தவர் செறிவாக வாழும் பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களின் காணி உரித்தை உறுதி செய்தல், காணிகளின் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் என்று காணி சம்பந்தமான சிக்கல்வாய்ந்த ஏராளம் பிரச்சினைகள் உள்ளன.
கரிமலையூற்று பள்ளிவாசல் விடுவிக்கபட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதனை விடுவிக்கும் நடவடிக்கை அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் இடம்பெயர்ந்த மக்களுக்காக சவூதி அரசாங்கத்தால் நுரைச்சோலையில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான வீட்டுத் திட்டம் காடாகி கிடக்கின்றது. முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருப்பதால் அதை யாருக்குமே வழங்குவதற்கு இனவாதிகள் விடமாட்டார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. எனவே நியாயமான அடிப்படையில் அதனை எல்லா இன மக்களுக்கும் பகிர்ந்தளித்தால் கூட பரவாயில்லை. ஆனால் இதை ஒரு பெரிய பிரச்சினையாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கருதுவது கிடையாது. இது தவிர முஸ்லிம்களிடையே கல்வி, சமூக, பொருளாதார பிரச்சினைகள் என ஆயிரத்தெட்டு விடயங்கள் அரசியல்வாதிகளின் கண்ணில் படாமல் இருக்கின்றன.
இவற்றை எல்லாம் செய்யாமல் காலத்தை வீணடிக்கின்ற வெறும் கிளுகிளுப்புக்களும் உச்சாணிக் கொம்;பில் ஏற்றுகின்ற பேச்சுக்களையும் கூறி மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்னும் வெற்றிக் களிப்பில் இருந்து வெளியில் வரவில்லை. வரவேற்பு விழாக்களில் கலந்து கொள்ளவும் நன்றி தெரிவிக்கும் கூட்டங்களை நடாத்தவுமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கின்றது. மறுபுறத்தில் தோல்வி அடைந்தவர்கள் மூலைக்குள் முடங்கி சோகத்துடன் இருக்கின்றனர். எங்களை தோற்கடித்து விட்டார்கள் எனவே வெற்றிபெற்றவர்களிடம் மக்கள் தமக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ளட்டும் என்று சில முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அஞ்சாவாசம் செய்கின்றனர். இதற்கப்பால் தேர்தலுக்கு பிற்பாடு, உலமா சபையுடன் ஒரு சந்திப்பை நடாத்தியதை தவிர கனதியாக வேறெந்த நடவடிக்கையையும் முஸ்லிம் தலைமைகள் எடுக்கவில்லை. அந்த சந்திப்புக்கு கூட இரு அரசியல்வாதிகளே வந்திருக்கின்றனர். மற்றவர்களுக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருந்திருக்கும். இதுதான் முஸ்லிம் அரசியலின் நடைமுறை யதார்த்தம்.
கடந்த ஆறு மாதகால அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சராக பதவிவகித்த மு.கா. தலைவரின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபை இருந்த போதிலும் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை சரியாக தீர்க்கப்படவில்லை. மஹிந்த ஆட்சியில் பல வருடங்கள் தேசிய காங்கிரஸ் தலைவர் உள்ள10ராட்சி அமைச்சராக பதவி வகித்த போதும் பல முஸ்லிம் பிரதேசங்களின் எல்லைப் பிரச்சினைகள் இன்னும் மீதமாக இருக்கின்றன. இப்படித்தான் இந்த ஆட்சிக்காலமும் பயனற்று போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.
மக்களின் பங்கு
இதற்கு அடிப்படைக் காரணம் மக்கள்தான். உழைப்பதிலும் உடுப்பதிலும் சாப்பிடுவதிலும் அக்கறை செலுத்துவோர் என அறியப்பட்ட முஸ்லிம்கள் மார்க்க விடயத்தில் அவதானமாக இருக்குமளவுக்கு அரசியல், சமூக செயற்பாடுகளில் விழிப்புடன் இருப்பதில்லை என்றே கருத வேண்டியுள்ளது. எவ்வளவு மோசமான நயவஞ்சகத்தனமான அரசியல்வாதிக்கும் பாவமன்னிப்பு வழங்குகின்ற மனப்பாங்கு அவர்களுக்கு இருக்கின்றது. 'இவருக்கு இனி வாக்களிக்கக் கூடாது' என்று பேசித் திரிவார்கள், ஆனால் தேர்தல் வந்து விட்டால் ஒரு பாடலில் அல்லது ஒரு கோசத்தில் மயங்கி, மீண்டும் அவருக்கே வாக்களித்து விடும் நடைமுறை முஸ்லிம்களிடையே மட்டுமே இருக்கின்றது. அக்கறையற்ற மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற அரசியல்வாதிகள் மாத்திரம் சமூக சிந்தனை, அர்ப்பணிப்பு, அக்கறை உள்ளவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்.
ஜெனிவா கூட்டத் தொடர் அண்மையில் இடம்பெற்றது யாவரும் அறிவோம். இலங்கை முஸ்லிம்கள் இதுகாலவரைக்கும் தமக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் இழப்புக்கள் பற்றி ஒரு விரிவான அறிக்கையையோ ஆவணப்படத்தையோ இதில் முஸ்லிம் தரப்பு சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு செய்வது அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகிவிடும் என்று தம்மைத்தாமே குழப்பிக் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் வாழாவிருந்தனர். மு.கா. தலைவர் ஹக்கீம் மட்டும் சில காலத்திற்கு முன்னர் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அவராவது கடிதம் எழுதினார் ஏனையோருக்கு அதற்கும் நேரமில்லை. அப்படியென்றால் மற்றைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லையா? என்ற கேள்வி எழுகின்றது.
ஆனால் ஒன்று, ஹக்கீம் கடிதம் எழுதியமையாலேயே முஸ்லிம்கள் மீதான இனவாத செயற்பாடு குறித்து ஜெனிவா கூட்டத்தொடர் கவனம் செலுத்தியதாகவும் இது பெரும் வெற்றியென்றும் சில போராளிகள் பெருமைப்பட்டுக் கொண்டனர். அவர் கடிதம் எழுதியது உண்மைதான். ஆனால் அதன்காரணமாகவே இது நடந்தது என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கருத்தாகும். இது உண்மையில் காகம் குந்த பனம்பழம் விழுந்ததற்கு மிக நெருக்கமானதாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான கோயாபல்ஸ் கதைகளால்தான் இந்த சமூகம் இவ்வளவு பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், ஜெனிவா கூட்டத்தொடரை ஒரு குத்துச் சண்டை கோதாவைப் போல புதினம் பார்த்த முஸ்லிம் அரசியல்வாதிகளே மற்றைய எல்லோரும்.
அக்கறைக்குரிய விஷயம்.
அரசியல் தலைவர்களைப் போலவே மக்களும் இருப்பார்கள் என்று மேலே எழுதியுள்ளேன் அல்லவா. அதற்கு சான்றாக ஒரு நிகழ்வை குறிப்பிடலாம். அதாவது. ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் உச்சக்கட்டத்தில் இருந்தது. ஒரு திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் போல தமிழர்களும் முழு உலகமும் அதனை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இலங்கை முஸ்லிம்கள் அசாத் சாலியின் பெண் தொடர்பு பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இணையத்தளங்களும் சமூக வலைத்தளங்களும் அசாத் சாலி பற்றியே எழுதிக் கொண்டிருந்தன. ஒரு அரசியல்வாதிக்கும் இன்னுமொரு அரசியல்வாதியின் மனைவிக்கும் இடையிலான உறவின் புனிதத்தன்மை பற்றி முஸ்லிம்கள் கடுமையாக வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர். அசாத் சாலியும் அதை ஒரு சர்வதேச பிரச்சினை போல கருதி பகிரங்கமாக விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
உண்மையாகவே, அக்காலப்பகுதியில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க இலங்கை முஸ்லிம்கள் உள்நாட்டில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை சாத்வீகமாக நடத்தியிருக்க வேண்டும். தலைவர்கள்தான் ஒன்றும் செய்யவில்லை நாமாவது நமது உரிமைக்காக குரல் கொடுப்போமே என்றுதான் சுரணையுள்ள எந்த சமூகமும் எண்ணியிருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறு செய்யவில்லை. அதைவிட்டுவிட்டு விபச்சாரம், கள்ளத் தொடர்பு என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அசாத்சாலி சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சமகாலத்தில் கள்ளத்தொடர்பு பற்றி ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகின்றது என்றால் அதனது பின்னணி என்னவாக இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. முஸ்லிம் சமூகம் எவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துகின்றது என்பதற்கு இது நல்லதொரு உதாரணமாக கருதப்படக் கூடியது.
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து மக்களுக்கே முதலில் அக்கறை ஏற்பட வேண்டும். குளியலறையில் மட்டுமே அரசியல் பற்றியும் இந்த சமூகத்தின் பிரச்சினைகள் பற்றியும் சிந்திக்கும் நிலைமையை முஸ்லிம்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல் பதவிகளுக்கும் பணத்திற்கும் பின்னால் ஓடித்திரிந்து செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் காட்டும் மனநிலையை முஸ்லிம் அரசியல்வாதிகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தேர்தல்கள் இத்தோடு முடிந்து விடவில்லை. அடுத்தடுத்து தேர்தல்கள் வரும். அவ்வாறு மாற்றிக் கொள்ளாத அரசியல்வாதிகள், அவர்கள் எந்தப் பெரிய தலைவராக இருந்தாலும் சரி, அவரை மாற்றிக் காட்ட வேண்டும்.
ஏனென்றால், சோளக்காட்டு காவல் பொம்மைகளால் பயங்காட்ட முடியுமே தவிர, சமூகத்தை பாதுகாக்க முடியாது.

0 Comments