Subscribe Us

இனவேறுபாடு காரணமாக குழந்தைகளின் மீது சிறுநீர் கழித்த நபர்கள்

ஜேர்மனியில் இனவேறு காரணமாக தாய் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய நபர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு தாய் மற்றும் அவரது இரு குழந்தைகளும் பெர்லின் நகரில் ரயிலில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது ரயிலில் குடிபோதையில் ஏறிய இரண்டு நபர்கள் அவர்களிடம் இனவேறுபாடுடன் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஹிட்லரை புகழ்ந்து பேசிய அவர்கள் நாஜிக் படையினரை போல் வணக்கமும் தெரிவித்துள்ளனர்.மேலும் நாங்கள் தான் உயர்ந்த இனம் என்றும் உரக்க கத்தியுள்ளனர்.

பின்னர் போதையில் இருந்த நபர்களில் ஒருவர் குழந்தைகளில் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார் ரோபர்ட் மற்றும் கிறிஸ்டோப் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டதால் அவர்களுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் ரோபர்ட் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்டோப் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அப்பகுதி அரசியல் தலைவர்கள் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments