பள்ளி மாணவி ஒருவர் பாடங்களை புத்தகத்தில் எழுதவில்லை என ஆத்திரம் கொண்ட ஆசிரொயை ஒருவர், அந்த மாணவியின் முகத்தில் குத்து விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோமானிய நாட்டில் Tulcea மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர் பாடங்களை புத்தகத்தில் எழுதவில்லை என்பதற்காக தாக்கியுள்ளார்.
வலியால் மாணவர்கள் அலறினாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர்களை தாக்கி வந்ததை சக மாணவர்கள் படம் பிடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தெரிவிக்கையில், அந்த ஆசிரியர் என்றாலே மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட பதிவை பார்வையிட்டுள்ளதாக கூறும் அவர், அது தம்மை மிகவும் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த ஆசிரியரிடம் கலந்து பேசியதாக தெரிவித்த அவர், ஆனால் அந்த ஆசிரியர் அதை பொருட்படுத்தாமல் வீடியோ பதிவினை அழித்துவிடுமாறு கட்டாயப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
தற்போது அந்த வீடியோ பதிவை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கியுள்ளதாகவும், அவர்கள் அது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளதாகவும், மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.


0 Comments