புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு ஓரிரு தினங்களுக்குள் 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல எதிர் காலங்களில் சகல ஊழல் மோசடிக் காரர்களும் அகப்பட்டுக் கொள்வார்கள் என திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். ஆனமடு நகரில் இடம்பெற்ற பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
எவ்வளவுதான் முறைப்பாடுகளைச் செய்தாலும் இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களே ஊடகங்களில் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். வரலாற்றில் மிகப் பெரிய இலஞ்சப் பணத்தைப் பெற்ற சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவமானது இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினர் செயலில் இறங்கியிருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எதிர்காலங்களில் சிக்கிக் கொள்வார்கள்.

0 Comments