பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தை நிறுத்திய கல்வி அமைச்சு, அதற்குப் பதிலாக இவ்வருடம் முதல் பல்கலைக்கழக மட்டத்தில் மாற்று நிகழ்ச்சித் திட்டமொன்றை செயற்படுத்த தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் சகல மாணவர்களுக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டம் கட்டாயமாகும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹன் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் திறன்களையும், உடல் ஆரோக்கியத்தையும் விருத்தி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் அமையவுள்ளதாகவும் இவ்வருடம் பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சித் திட்டத்துக்குள் உள்வாங்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

0 Comments