Subscribe Us

header ads

அல் மீஸான் அமைப்பின் நலன்புரி பணி

பி. முஹாஜிரீன்

கட்டாரில் தொழில் புரிவோரினது அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பின் நிதியுதவியில் பாலமுனைப் பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு மலசல கூடங்கள் நிர்மாணித்துக் கொடுக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அல் மீஸான் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ரி.எம். ஹ_தைப் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் பாலமுனைப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 4 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு இம்மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்படுவதுடன் சின்னப்பாலமுனை ஸஹ்வா அறபுக் கல்லூரியில் 2 மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஓவ்வொன்றும் சுமார் 60 ஆயிரம் ரூபா செலவில் அல் மீஸான் அமைப்பினரது நேரடிக் கண்காணிப்பின் கீழ் இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றின் நிர்மாணப் பணிகளை அல் மீஸான் அமைப்பின் பிரதிநிதிகள் குழு இன்று (06) பார்வையிட்டனர். அதன் உறுப்பினர்களான ஏ.எல்.எம். உவைஸ், என்.எம். பரீட், ஏ.எல். முர்ஸித், ஏ.எம். வாஜித், ஏ.எல். ஹம்ஸா, ஏ.பி.எம். உவைஸ், ஏ.எல்.ஏ. வஹாப் ஆகியோர் அடங்கிய குழுவினர் இதில் சென்றிருந்தனர்.

அல் மீஸான் அமைப்பினால் பல்வேறு சமூக நலப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் வறிய குடும்பங்களின் முன்னேற்த்திற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாயல்களுக்கு இப்தார் கஞ்சி மற்றும் கட்டட நிர்மாணத்திற்கு நன்கொடை வழங்கல், ஒலிபெருக்கி வசதிகள் வழங்கல், கணணி வழங்குதல், மின்சார இணைப்பு வழங்கல், குடி நீர் பெற்றுக் கொடுத்தல், புதிதாக இஸ்லாத்தை ஏற்றோருக்கு உதவி வழங்கல், மலசலகூடம் நிர்மாணித்தல் போன்ற பல நலன்புரி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments