பி. முஹாஜிரீன்
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் உலக ஆசிரியர் தினத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) ஆசிரியர் தின வைபவங்கள் நடைபெற்றன.
பாடசாலையின் அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளருமான பி.எம். அபுல்ஹசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ஆசிரியர்கள் மாணவர்களால் மாலை அணிவித்து சின்னங்கள் சூட்டி வரவேற்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்களாலும் அதிதிளாலும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments