Subscribe Us

header ads

"அயோக்­கி­யர்­களின் இறுதிச் தஞ்சம் தேசப்­பற்று" அதே­போன்­ற­தொரு நிலை இன்று நாட்டில் தலை­தூக்­கி­யுள்­ளது.

"அயோக்­கி­யர்­களின் இறுதிச் தஞ்சம் தேசப்­பற்று" அதே­போன்­ற­தொரு நிலை இன்று நாட்டில் தலை­தூக்­கி­யுள்­ளது. இவ்­வா­றா­ன­வர்­களே சர்­வ­கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு குழப்­பத்தை ஏற்­ப­டுத்தி ஆட்­சியை கைப்­பற்ற முயற்­சி­களை முன்­னெ­டுக்­கின்­றனர் எனக் குற்­றம்­சாட்­டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்­மையை கண்­ட­றிந்து இனங்­க­ளி­டையே மீளி­ணக்கம் ஏற்­பட வேண்­டு­மென்­பதே ஐ.நா. அறிக்­கையின் எதிர்­பார்ப்­பாகும் என்றும் அமைச்சர் தெரி­வித்தார்.


பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை தொடர்­பான ஐ.நா. அறிக்கை மற்றும் ஜெனிவா தீர்­மானம் தொடர்­பான இரண்டாம் நாள் விவா­தத்தில் உரை­யாற்­றும்­போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், சர்­வ­தே­சத்­திற்கு நாம் வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­றா­ததன் கார­ண­மா­கவே சர்­வ­தே­சத்தில் எமக்கு அவ­மா­ன­மான ஒரு நிலை தோன்­றி­யது. இவ்­வா­றா­னதோர் நிலை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் புதிய ஆட்சி ஏற்­பட்­டது. சர்­வ­தேசம் புதிய ஆட்­சியின் நல்­லாட்­சியை புரிந்து கொண்­டது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா.வில் இலங்கை தொடர்­பான அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருந்த போதும் அது செப்­டெம்பர் வரை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. இன்று புதிய ஆட்சி சர்­வ­தேச விசா­ர­ணை­யி­லி­ருந்தும் சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ ர­ணை­யி­லி­ருந்தும் நாட்டை பாது­காத்து உள்­ளக விசா­ர­ணைக்­கான பாதையை திறந்­துள்­ளது.

இது எமது அரசின் வெளி­நாட்டு கொள்­கைக்கு கிடைத்த வெற்­றி­யாகும். ஆனால் தேசப்­பற்­றா­ளர்கள் என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்வோர் எமது படை­யி­னரை நாம் பலி கொடுக்கப் போவ­தாக பொய்­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.
அயோக்­கி­யர்கள் இறு­தி­யாக தஞ்­ச­ம­டையும் இடம் தேசப்­பற்று என ஒரு ஆங்­கிலக் கவிஞன் கூறி­யி­ருக்­கின்றார். அத­னைப்­போன்று நாட்­டுக்குள் தற்­போது தேசப்­பற்­றா­ளர்கள் தலை ­தூக்­கி­யுள்­ளனர். இவர்கள் இன­வா­தத்தைப் பரப்­பு­கின்­றனர். ஜனா­தி­பதி தலை­மையில் இடம்­பெற்ற ஜெனிவா ஐ.நா அறிக்கைக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட இந்த தேசப்பற்றாளர்கள் குழப்பங்களை ஏற்படுத்தினர். இவ்வாறு குழப்பத்தை ஏற் படுத்தி ஆட்சியை கைப்பற்ற இவர்கள் முயற் சிக்கின்றனர்.

Post a Comment

0 Comments