Subscribe Us

அனுராதபரம் - கடபனஹா – முதிதா மாவத்தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளர் கொலை

அனுராதபரம் - கடபனஹா – முதிதா மாவத்தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


முகத்தை மூடியவாறு நேற்று இரவு குறித்த விடுதிக்குள் நுழைந்த சிலர், அவரை தாக்கி கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராட்டே பயிற்றுவிப்பாளரான 57 வயதுடைய அவர், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

சுமார் 20 பேர் வரையில் முகமூடி அணிந்து வந்து இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

அவர்களால் விடுதியின் முகாமையாளர் உள்ளிட்ட 3 சேவையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments