குச்சவெளி – யான் - ஓயவுக்கு அருகில் உள்ள வனப்பகுதி ஒன்றில் புதையல் தோண்டிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல்மோட்டை விசேட காவற்துறை அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டு, குச்சவெளி காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய பல பொருட்களுடன், வாகனம் ஒன்றும், பூஜைப் பொருட்களும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.
கைதானவர்கள் வாரியபொல, புல்மோட்டை, வெலிஓய உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 Comments