Subscribe Us

வெலே சுதாவின் சகோதரியைப் பிடிக்க பொலிசார் தீட்டிய திட்டம்

இலங்கையின் போதைப் பொருள் வர்த்தகத்தில் 70 வீதத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் வெலே சுதாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரது சகோதரி 40 கிராம் ஹெரோயினுடன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இக்கைதானது தாம் திட்டிய திட்டத்தின் அடிப்படையில் நடந்தது என பொலிசார் தெரிவித்துள்ளனர். பொரள பகுதியில் 60 கிராம் போதைப்பொருளுடன் கைதான பெண் ஒருவரே இதற்கான அடிப்படைக் காரணம் என விளக்கியுள்ள பொலிசார் அப்பெண் விசாரிக்கப்பட்டதன் விளைவில் அவருக்கு பேதைப்பொருளை வழங்குவது சுதாவின் சகோதரியின் கணவன் என அறியக் கிடைத்ததாகவும் அதனடிப்படையில் அவரை வளைத்துப் பிடிப்பதற்காக தீட்டிய திட்டத்தில்போதைப்பொருளுடன் வந்து சேர்ந்தது சுதாவின் சகோதரியெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாபாரத்திற்கு மேலதிகமாக 40 கிராம் தேவைப்படுகிறது என தெரிவித்து அதனை அவசரமாகத் தரும்படி மறுமுனையில் ஏற்பாடு செய்யப்பட்ட நபர் கோரவே அதனை எடுத்துக்கொண்டு பேருந்தொன்றில் வெலே சுதாவின் சகோதரி வந்ததாகவும், காரில் வந்தால் ஆபத்தென்பதால் போதைப்பொருளை இடுப்பில் வைத்துக் கொண்டு பேருந்தில் அவர் வந்த போதே மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
7 கிராம் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச் சாட்டிலேயே சுதாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.-Sonakar.com-

Post a Comment

0 Comments