Subscribe Us

header ads

உங்கள் பேஸ்புக் பக்கத்தை அரசாங்கம் உளவு பார்க்கின்றதா?

அரசாங்கமோ அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ உங்களது பேஸ்புக் பக்கத்தை உளவு பார்ப்பதாக தோன்றினால் பேஸ்புக் உடனடியாக உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் என பேஸ்புக்கின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டேமோஸ் தெரிவித்துள்ளார்.

அரசு சார்ந்த அமைப்புகள், தனிநபரின் பேஸ்புக் பக்கத்தில் நுழைய முற்படும்போது, பயனாளரின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக் நிறுவனம் தனது பாதுகாப்பு நடவடிக்கையை மேம்படுத்தியுள்ளது.

இதன்படி பயனாளர் அல்லாத அரசாங்க நிறுவனங்களே பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைய முற்பட்டாலும் இந்தத் தகவலை பேஸ்புக் தனது பயனாளருக்கு தருவது மட்டுமின்றி, அவரது அலைபேசிக்கு அனுப்பும் பிரத்யேகமான குறிப்புகளை மட்டுமே பயன்படுத்தி பேஸ்புக்கை உபயோகிக்க இயலும்படி செய்துள்ளதாகவும் பேஸ்புக்கின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டேமோஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பயனாளரின் தனியுரிமை மேலும் பாதுகாக்கப்படும் என கருதப்படுகின்றது. 

Post a Comment

0 Comments