அபு அலா –
அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தி யசாலைகளுக்கு சுகாதார பிரதி அமை ச்சர் பைசால் காசிம் தலைமையிலான சுகாதார உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று சனிக்கிழமை (10) விஜயம் செ ய்து வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் பற்றி நேரில் சென்று ஆராய்ந்தனர்.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மகிபால உள்ளிட்ட உயரதிகாரிகள் கொண்ட இக்குழுவினர் சம்மாந்தறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை, மருதமுனை மாவட்ட வைத்தியசாலை, கல்முனை தெற்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை, நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, பாலமுனை மாவட்ட வைத்தியசாலை, அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு நேரடியாகச் சென்று அங்கு நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து கொண்டார்.
மேலும் இக்குழுவினர் சகல வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு, வெளி நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதிகள், மருந்து களஞ்சியம் என்பவற்றை பார்வையிட்டனர். அத்துடன் வைத்தியசாலைகளில் நிலவும் ஆளனி மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடு கள் பற்றியும், வைத்தியசாலைகளு க்கு மிக அவசரமாக தேவைப்படும் உ பகரணங்களின் குறைபாடுகள் பற்றி மேற்குறிப்பிட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரினால் முன்வைக்கப்பட்டது.
இதேவேளை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மகிபால மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் ஆகியோர் வைத்தியசாலைகளுக்கு மிக அவசரமாக தேவைப்படும் அனைத்து தேவைகளையும் மிக துரிதமாக செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்தனர்.
இந்த விஜயத்தில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், சுகாதார பிரதி அமைச்சரின் விஷேட ஆலோசகரும் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் கே.எல்.எம்.நக்பர் உள்ளிட்ட சுகாதாரத்துறை உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

0 Comments